உவங்களை பற்றி இவங்களிடம் இருந்து.....!

எழுத்தாளர் : உவங்கள்மின்னஞ்சல் முகவரி: [email protected]Banner

நாங்கள் யதார்த்தவாதிகள்
அதனால்
அசாத்தியங்களை கனவு காண்கிறோம்
-சே குவரா

பேரன்பு கொண்ட உவங்களின் உறவுகளே உங்களுக்கு உவங்களின் அன்பு கலந்த வணக்கம். மீண்டும் சுயலாபமற்ற பொதுநலத்திற்க்காய் வித்திட்ட ஒரு உயிர்ப்பு முகிழ்ந்த மாதத்தில் புதிய இதழில் புத்துணர்ச்சியுடன் சந்திப்பதில் மட்டற்ற மகிழ்ச்சி. உவங்களின் சனம் ஒன்று ஆள் எட்டு இதழ் இந்த முறையும் உங்கள் இலக்கியப்பசிக்கு விருந்தளிக்கும் என்பதில் எவ்வித ஐயமும் இல்லை. இம்முறையும் புதிய எழுத்தாளுமைகளுடன் உவங்களை வெளிக்கொணர்வதில் மட்டற்றமகிழ்ச்சி அடைகிறோம். வழமை போலவே இம்மாத உவங்கள் இதழ் வடிமைப்பை மேற்கொண்ட துவாரகன் பேரின்பநாதன் அவர்களுக்கும் முகப்பு ஓவியத்தை வரைந்தளித்த சுலக்சன் அவர்களுக்கும் எமது நன்றிகள்.

தமிழ் கதைப்பவர்கள் அனைவரும் தமிழர்கள் அல்ல என ஒரு தரப்பினர் விவாதித்து கொண்டிருக்க, பால்வீதி கவிதை தொகுப்பின் மூலம் 1974 இலக்கிய உலகுக்கு அறிமுகி தமிழ்கவியாய் வாழ்ந்து சேவை ஆற்றிய கவிக்கே அப்துல் ரகுமான் மூப்படைகையில் அவருக்கு வயது 80. கவிக்கோ தமிழ், ஆங்கிலம், ஹிந்தி,அரபு,உருது,பாரசீகம் மொழிகளில் தேர்ச்சி பெற்றவராய் இருந்தார். 1960 இல் நடைபெற்ற இந்தி எதிர்ப்பு போராட்டங்களில் கவிக்கேவின் பங்கும் குறிப்பிட தக்க ஒன்று. பத்திற்கும் மேற்பட்ட விருதுகளை வென்றவர் என்பதும் குறிப்பிடதக்கது. கவிக்கோவின் இழப்பிற்கு உவங்கள் குழுமத்தின் சார்பில் அஞ்சலிகளை செலுத்திக் கொள்கிறோம். 

ஆதரவளிக்கும் அனைத்து உள்ளங்களுக்கும் எமது நன்றிகள். தொடர்ந்தும் இணைந்திருப்போம்
Views: 561