பெருவெளி பிரவேசம்

எழுத்தாளர் : ஷாருஜன்மின்னஞ்சல் முகவரி: [email protected]Banner

இந்த இடம் நம் புவியின் இயல்புகளை கொண்டிருக்கவில்லையே என்று குருவை பார்த்து வினாவினான் சொம்பை. 

மூடா அதெப்படி ஒன்றாக இருக்கும். இரண்டும்  பெருவெளியின் இருவேறு நிலைகள். ஒன்றை ஒன்று சந்திக்காது, ஒன்றை ஒன்று தீண்டாது. வாரத்திற்கு ஒரு முறையேனும் இவ்வெளிகளினூடாக புலன்களை பரவவிட்டு அலைந்து திரிவேன். இன்று உன்னையும் கூட்டிவர முடிந்தது.

காரணங்களே அல்லாத இன்பம் அகத்தினுள் கிளை பரப்புகின்றது குருவே. காரணத்தோடு வரும் இன்பம்   காலாவதியாகிவிடுமல்லவா ஆனால் இது நிரந்தரம் போல் தோன்றுகின்றது. 

உன் வாழ்வில் இதுவோர் உச்சம். இயலுமானவரை அனைத்தையும் உள்வாங்கிக்கொள். இங்கு நாமிருவர் மட்டும்தான் உயிர் கொண்டவர்கள். இவ்வுண்மை உன் சித்தம் கலங்க வைக்கும். எனவே அடிக்கடி வான்வெளியை நோக்கு. மின்னும் நட்சத்திரங்கள் அனைத்தையும் சக உயிரிகள் என கொள்.

தூரத்தில் மலைகள் வெண் பட்டுத்திரை காற்றில் அலைந்து மிதப்பது போல் உயர்ந்து தாழ்ந்து தொடர்ந்து செல்கின்றதே. பார்க்கும் போதே கண்களிற்கு குளிர்மையை தருகின்றது. நாம் அங்கு பிரவேசிக்கமுடியாதா குருவே?

முடியும். ஆனால் ஒரு சுருட்டை இருவரும் பகிர்ந்து இவ்வளவு தூரம் வந்ததே பெரிய விடயம். அம்மலைகளிற்குள் பிரவேசிக்க வேண்டுமெனில் அடுத்த சுருட்டை பற்ற வைக்கவேண்டும்.

தாங்கள் மனம் வைத்தால் அடியேன் அக்கண்கொள்ளாக்காட்சியை பார்க்கவியலும்.

எனில் சுருட்டையும் கஞ்சா இலைகளையும் எடுத்துவா.

புகைத்துவிட்டு அடுத்த தளத்திற்குள் சஞ்சரிப்போம்.  
Views: 474