காய்ந்த குருதி....!

எழுத்தாளர் : மதுஷா மாதங்கிமின்னஞ்சல் முகவரி: [email protected]Banner

நேசம் நிராகரிக்கப்பட்ட பின்னும் 
மேய்ப்போனை தொடரும் 
ஆட்டுக்குட்டியின் கனவில் 
தேவன் தன் முகமூடி கழற்றி 
சாத்தானான கதையை கூறிச் சென்றார்
 
தேவனின் முகமூடி தேடிச் சென்றவர்கள் 
எதிர்பட்ட முகங்களை எல்லாம் அணிந்து கொண்டனர்
தேவனாகும் அவர்களின் சபதம் 
சாத்தானின் எல்லைகளை எல்லாம் அசைக்கத் தொடங்கியது.

மாறு வேடத்தில்
மண் குழைத்து குடில் கட்டத் தொடங்கினார் சாத்தான்

தேவனின் முகம்
உண்மையின் நிழலை புதைத்துக் கொண்டிருந்தது
புதைத்த இடம் எங்கும் புது வேர்கள்
கணப்பொழுதில் கிளை விட்டு மரமானது
கருணை பொங்க அவர்கள் கூடுகளை விற்கத் தொடங்கினார்கள்
அவர்களின் நிறங்கள் பிரிதறியமுடியதவை
அவர்களின் வாசம் காய்ந்த குருதி....!
  
Views: 320