நித்திரையா தமிழா

எழுத்தாளர் : மயூரெதன்மின்னஞ்சல் முகவரி: [email protected]Banner


தாய்த் தமிழே தலைவணக்கம்!!
நின் உயிர் முழுதும் உன்னுள் அடக்கம்!!

கல்தோன்றி மண் தோன்றா காலத்தில்
முன்தோன்றிய மூத்த மொழியடா தமிழ்!!
கொஞ்சம் செருக்குடனே 
வெளி நாட்டவளும்
'தமிழன் என்று சொல்லடா தலை நிமிர்ந்து நில்லடா' எனும் கோஷம்!!

அடங்காத மிடுக்குத்தான் தமிழனுக்கு!!
வெறும் மாயை வலையில்
மதி கெட்டு வாய் வார்த்தையில்
அறங்கொட்டுகின்றான் தமிழன்!! 

இன்று!!
என் தமிழனின் நிலைதான் என்ன??
ஈன்ற தாய் செழித்திருக்க
மாற்றான் தாய் கொங்கையில் 
பால் சொட்டாதா என பார்த்திருக்கும்
அறிவிலிக் குழந்தை!! 

செம்மொழியில் நம் மொழி
எம் நா தவழ்வதோ மாற்றான் மொழி
எனில் ஒப்புமை வேறென்ன கூற!!
நாணித் தான் தலை தாழ்த்துகின்றேன்
இவர்களுள் நானும் ஒருவன் என!!

பெருமிதம் கொள்ளும் இமய உச்சியில்
தாய் மொழியிருப்பினும்
தரம் கெட்ட நம்மவன் 
தடுமாறி தத்தளிப்பது ஏன் அன்றோ!!

ஆடம்பரத்திற்காய் கலைச் சொற்கள்
வாய் நுழைத்த காலம் மலையேறி
அத்தியாவசியமாய் மாறிக் கொண்ட
வழி உணராயோ தமிழா!!

இரு நூற்று நாற்பத்தெட்டு தராத ஒன்றை
வெறும் இருபத்தாறு தருமன்றோ!!

இல்லை
தொழில் நுட்ப மோகத்தில்
பெற்றவளை தள்ளி வைத்து
வேசையை தாய் என்று
மத்தளம் தட்டுகின்றாயோ நான் அறியேன்!!

குறிஞ் செய்திகளில் என் தமிழ்
ஆங்கில வரிவடிவில் உருக்கொள்ள
உண்மைத் தமிழன் உயிர்
உருக்குலையும் அறியாயோ!!

'ஸ்போக்கின் இங்கிலிஸ் கிளாஸ்'
எனும் காலம் போய்
தமிழுக்கு பள்ளி தொடங்கும் காலம்
வெகு தொலைவில் இல்லை!!

ஆயிரம் இனம் இருக்கட்டும்!!
அதற்கு ஆயிரம் அடையாளங்கள் இருக்கட்டும்!!
மூடத் தமிழனே;
உன் இனத்தின் அடையாளம்
என் அன்னைத் தமிழே!!

நீ மறக்கலாம்!!
மறக்கடிக்கப்படலாம்!!
ஒன்று மட்டும் நினைவில் கொள்
நீ இழப்பது மொழியை அல்ல உன்னை!!

உயிர் கொன்று இனமழிப்பது
கண் கூடாய் கண்டாய்!!
மொழி கொன்று 
நீயே தற்கொலை செய்கின்றாய்!!
அழிந்து கொண்டுதான் இருக்கின்றது தமிழ் இன்றும்!!

சேர்த்து வைத்த பெருமைகளை
வைத்து வாழும் இனம் என்ற
பெயர் போய்
நம் சந்ததிக்காய் சேர்த்து வைக்கும் 
இனமாய் மிளிர்ந்திடுவோம்
தோழர்களே!!

பேச்சுத் தமிழ் மூச்சாய் வாழ
இனி ஒரு விதி செய்வோம்!!

'தமிழிற்கு அமுதென்று பெயர்
அந்த தமிழ் இன்ப தமிழ் எங்கள் உயிருக்கு நேர்'


Views: 510