தலைக்கு மேல் ஒருவன்

எழுத்தாளர் : விபிசன் மின்னஞ்சல் முகவரி: [email protected]Banner


ஆத்திகன் கண்டேன்
ஆற்றுபவை அனைத்திற்கும் ஆண்டவன் மேல் பழி போட்டான்
நாத்திகன் கண்டேன் 
கஞ்சா அடித்தவன் போல் விஞ்ஞான வடம் இழுத்தான்

சுயமாய் ஒன்றை சுத்தமாய் ஒன்றை சுயேச்சையாய் ஒன்றை
என் மனது சொன்ன வழி 
சில முடிச்சுக்களை அவிழ்த்து 
ஒரு முடிச்சாய்ப்போட்டு விட்டேன்

மதம் கொண்டு மதம் தீர்க்க
கடவுளாய் மனம் ஈர்க்க
முன்னோர்கள் கண்டனர் வழி
விண்ணோர்கள் உண்டு என்று
போட்டனர் பிள்ளையார் சுழி..

சைவமாய் அசைவமாய் 
சமயத்துள் சில
அபயமும் அளிக்கலாம் 
அபாயமும் அளிக்கலாம்

என் கருத்தும் எதிர் இல்லை 
விண் படைத்த ஜீவன் ஒன்று
விஞ்ஞானம் தாண்டி உண்டு
எலிக்கு மேலும் இருக்கலாம் 
ஏலியனாயும் இருக்கலாம் 
Views: 533