உவங்களை பற்றி இவங்களிடம் இருந்து.....!

எழுத்தாளர் : உவங்கள்மின்னஞ்சல் முகவரி: [email protected]Banner

உவங்களின் உறவுகள் அனைவருக்கும் எமது வணக்கங்கள். உவங்களின் பாதையில் இன்றைய நாள் மிகவும் நெகிழ்ச்சியான நாள். கடந்த வருடம் இதே நாளில் உவங்களின் முதல் இதழிலின் ஊடாக உங்களை நாம் சந்தித்திருந்தோம். இன்றும் அதே நாளில் அதீத மகிழ்வுடன் உங்களை சந்திக்கிறோம்.  எமது இந்த வளர்ச்சிக்கு வாசகர்களாகிய உங்களின் பங்களிப்பு மிக முக்கியமானது என்பதை நாம் மறக்கவில்லை. இணைய உலகில் ஈழத்தில் இருந்து தொடர்ச்சியாக ஒரு இணைய இதழாக உவங்கள் வெளிவருவதற்கு உறுதுணையாக இருந்த உங்களின் காத்திரமான பங்களிப்பை இந்நேரத்தில் நினைவுகூருகிறோம்.  இந்த ஒருவருட காலத்தில் உவங்கள் எதிர்கொண்ட விமர்சனங்கள் உவங்களின் வளர்ச்சிக்கே உரமாக அமைந்திருந்தது. கடந்த வருட உவங்களில் பல எழுத்தாழுமைகளை அறிமுகம் செய்திருந்தோம். அதே போன்றே இவ்வருடமும் பல எழுத்தாழுமைகளை கண்டறிந்து களம் வகுத்துக் கொடுக்கவிருக்கிறோம். கடந்த வருட உவங்களில் பங்கு கொண்ட எழுத்தாழுமைகளுக்கு எமது நன்றிகள். அதே போன்று அட்டைப்படம் வழங்கிய அனைத்து ஓவியர்களுக்கும் உவங்கள் இணையப்பக்க வடிவமைப்பாளர்க்கும் எமது நன்றிகள். 

இரண்டாம் ஆண்டு முதல் உவங்கள் இதழான சனம் 2  ஆள் 1 உங்களை இம்முறையும் மகிழ்விக்கும் என நம்புகிறோம். இம்முறை உவங்களுக்கு ஓவியத்தை வழங்கிய சாஜிடீன் சஹினாஸ் அவர்களுக்கும்  அட்டை படவடிவமைப்பை மேற்கொண்ட துவாரகன் அவர்களுக்கும் நன்றிகள். தொடர்ந்தும் இணைந்திருங்கள் உறவுகளே
 
Views: 628