சிறுகதைகள்

எழுத்தாளர் : சச்சின் மின்னஞ்சல் முகவரி: [email protected]Banner

நேரம் தூரம் வேகம்


முதலில் உலகை சுற்றி வருபவர்களுக்கே பழம் சொந்தம்.
நாரதா, என் மயிலின் அதி உச்ச வேகம் 16KM/H. பூமியின் சுற்றளவு 24,874 மைல்கல். பூமியை சுற்றிவர எப்படியும் 105 நாட்களாவது தேவைப்படுமே. அதற்குள் பழம் அழுகிவிடும் என்ற அடிப்படை இயற்பியல் அறிவு கூட இல்லாத  மூடனா நீர் ???
மாம்பழம் வேண்டாம், அறிவியல் கற்க புறப்பட்டார் விநாயகர்.
 
முற்றும்


அந்நியன்

நான் நிர்வாணமாக இருக்கிறேன். பக்கத்தில் அவனும். அவன் இன்னும் தூங்கிக்கொண்டிருந்தான். சீ !!! நேற்றிரவு ஒரு அந்நியனுடன் படுக்கையை பகிர்ந்திருக்கிறேன். நினைக்கவே அருவருப்பாக இருந்தது. அவன் என்னை கட்டியணைத்து கன்னத்தில் முத்தமிட்டு இதழ்களைச் சுவைத்து ஆடை கலைந்து..... அதற்குமேல் நினைக்கவே உடல் கூசியது. நேற்றுவரை இருந்த நான் இப்பொழுது இல்லை, எதையோ இழந்திருக்கிறேன், ஏதோ மாறி இருக்கிறது.... ஏற்றுக் கொள்ளச் சிரமமாக இருந்தது....
திரும்பிப் பார்த்தேன் இப்பொழுது அவன் விளித்திருந்தான், லேசாக சிரித்தான், கண்களை சிமிட்டினான்.....
“குட் மோர்னிங் டி பொண்டாட்டி என்றான்”
கட்டி அணைத்தான் கன்னத்தில் முத்தமிட்டான் இதழ்களை சுவைத்தான்..... ஆடை கலைய தேவையிருக்கவில்லை. 

முற்றும்

Views: 0