உவங்களை பற்றி இவங்களிடம் இருந்து.....!

எழுத்தாளர் : உவங்கள்மின்னஞ்சல் முகவரி: [email protected]Banner

பேரன்பு கொண்ட உவங்களின் வாசகர்களுக்கு அன்பு கலந்த வணக்கம்

மீண்டும் ஒரு புதிய இதழில் புத்துணர்ச்சியுடன் சந்திப்பதில் மட்டற்ற மகிழ்ச்சி. சனம் ஒன்று ஆள் பத்திற்க்கான இதழ் இந்த முறையும் உங்கள் இலக்கியப்பசிக்கு விருந்தளிக்கும் என்பதில் உறுதியாய் உள்ளோம். இந்த உரையாடல்கள் வெற்றிகரமாய் நிகழ்வதற்கு உதவிய வாசக உள்ளங்களுக்கு அன்புகலந்த நன்றியை தெரிவித்துகொள்கிறோம்.

புத்தகங்களிற்காய் செலவிடும் தொகை முதலீடே

டியிற்றல் மயமாக்கப்பட்ட வாழ்வில் எல்லாமே கைக்குள் சுருங்கிவிட்டது. ஸ்மார்ட் போன்கள் ஒரு மனிதனின் தொழிற்பாட்டு அங்கமாய் மாறிவிடும் அளவிற்க்கு ஒன்றிப்போய்விட்டது. புத்தங்களை நாடுவதும் புத்தகங்களுடன் உறவு கொள்வதும் அருகிப்போய் செந்தரவு புத்தகத்தில் சேர்க்கும் அளவிற்கு ஆகிவிட்டது. இந்த நிலை எவ்வளவு அபத்தமானது. 

புத்தகங்களின் காட்சி படுத்தலும் அது தொடர்பான பரீட்சியத்தை எற்படுத்தலும் முக்கியமாதாய் ஆகிறது. அண்மையில் சென்னையில் நடைபெற்ற புத்தகக்கண்காட்சி மிக முக்கியத்துவமானது. குறைவான விலைகளில் வாசகர் ரசனைக்கு ஏற்ப தெரிந்தெடுத்தல் முக்கிய அம்சம். இது போன்ற புத்தக்கண்காட்சிகளின் வறட்சி எம் இடங்களில் மிக அதிகம். இவ்வாறான புத்தகக் கண்காட்சிகள் வாசிப்பு ஆர்வத்தை ஏற்படுத்துவதுடன், வாசகர்கள் அனைவரையும் ஒன்றிணைக்கவல்லது. அந்த ஒன்றிணைவு ஆளுமையான எழுத்தாழுமைகளையும் உருவாக்கவல்லது.

வழமை போலவே இந்த முறையும் அட்டைப்படம் வழங்கிய வல்வை சுலக்சனுக்கும் கணனி வடிவமைப்பில் உதவிய துவாரகனிற்கும் நன்றிகள். மீண்டும் அடுத்த உவங்களில் உங்களை சந்திக்கிறோம். அதுவரை உவங்களோடு இணைந்திருங்கள். 
 
Views: 0